‘தாமரைக் கோபுரம்’ பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்து என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022

கொழும்பு தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தியதாக நீர் சறுக்கு விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் kreate Design Pvt. Ltd மற்றும் Colombo lotus tower Management Pvt. Ltd ஆகிய நிறுவனங்களுக்கிடையில் நேற்று கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையூடாக, அடுத்த 03 ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தி டி.ஆர். விஜேவர்தன வீதி முழுமையாக சுற்றுலாப் பயணிகளை கவரும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதேவேளை இலங்கையின் இன்றைய நாணயமாற்று நிலவரத்தின்படி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் 36,722 கோடி ரூபாவாக கருத முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: