அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து!
Saturday, June 29th, 2019
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். எனினும், குறித்த விடயம் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Related posts:
எரிவாயுவின் விலை அதிகரிக்கவில்லை - அமைச்சு அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 21 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்!
ஜனவரியில் 83 உறுப்பினர்கள் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை - வெரிட்டி ரிசர்ச்...
|
|
|


