2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 21 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்!
Wednesday, November 11th, 2020
2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 01.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் 18முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்பு நவம்பர் 23 ஆம் திகதிமுதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 21 நாட்களுக்கு விவாதிக்க நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா - ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன...
சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை ...
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் - - மு.க.ஸ்டாலின்!
|
|
|


