அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை கணக்காய்வுக்கு உட்படுத்த எதிர்பார்ப்பு – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

அடுத்த இரு வாரங்களுக்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை, கணக்காய்வுக்கு உட்படுத்த எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் சுமார் 100 கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டங்களின் போது தமக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கைகள், கூட்டத்துக்கு கூட்டம் மாறுபட்டு காணப்பட்டன.
கனியவள கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள சொத்துகள் மற்றும் உடைமைகள் குறித்து, எந்த வகையிலும் உறுதிப்படுத்தக்கூடிய தரவுகள் அதன் முகாமைத்துவத்திடம் இல்லை.
அத்துடன் தற்போது வரை 24 முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் கனியவள சந்தையில் இணைய இணக்கம் வெளியிட்டுள்ளன.
அடுத்த மாதம் இறுதியாகும் போது, அவற்றில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் நாட்டின் சந்தையுடன் தொடர்புபடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|