அடுத்த ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் செயல்திறன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு!

Tuesday, August 15th, 2017

2018 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தின் மூலம் செயல்திறன் அடிப்படையில் செயற்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சுக்கள் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இந்நாட்களில் இடம்பெறுகின்றது. இதுவரை சமர்ப்பிக்கப்படாத அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளுக்குரிய செயற்திட்டங்கள் பற்றிய யோசனைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது

வருமானத்தை அதிகரித்தல், வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையைக் குறைத்தல், அரச கடன் சுமையைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது

Related posts: