பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!
Thursday, October 22nd, 2020
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கறித்த நடவடிக்கை கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக இதுவரை அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களை பிரதேச செயலகங்களுக்கு அழைக்கும் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் - நனோ தொழில்நுட்ப நிறுவனம...
திங்கள்முதல் மீண்டும் மின் துண்டிப்பு - இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்க...
தென்கொரியாவில் 8,000 இலங்கையருக்கு தொழில் - மனுஷவுடன் கொரிய மனிதவள திணைக்களம் உடன்பாடு!
|
|
|


