கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்கள் விற்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

Monday, February 6th, 2017

ஜனவரி மாதம் 27ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணம் செய்யப்பட்ட விலைகளுக்கு மேலதிகமான பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை முதல் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

சீனி,பயறு, பருப்பு, நெத்தலி, உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் எல்லை நிர்ணம் செய்யப்பட்டு விசேட வர்த்தமானி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பு செய்யப்பட்ட இப் பொருட்கள் தொடர்பில் யாழ்.வணிகர் சங்கத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை உறுதி செய்ய நாளை செவ்வாய்க்கிழமை முதல் பாவனையாளர் அலுவல்கள்கள் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் விசேட நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போதைய விலைக்கட்டுப்பாட்டை மீறி சீனி மற்றும் ஏனைய விலைக்குறைப்பு செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அராசாங்க அதிபர் உரிய அறிவுறத்தல் விடுத்துள்ளார். எனவே பாவனையாளர்களுக்கு தாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு திகதி மற்றும் கடையின் பெயர் பொறிக்கப்பட்ட விலை பற்றுச்சீட்டை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்ககொள்ளப்படுகின்றனர். மேலும் அதிக விலைக்கு பொலுட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் 021 7755455, 0770139307 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும். கிடைக்கப்பெறம் முறைப்பர்டுகளுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வரம் புலனாய்வு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மெற்கொள்வர் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

consumer-affairs-authority_0_0-415x260

Related posts: