காவலாளி அசண்டையீனம்:  சாரதியின் சாதுரியத்தால் இழப்புக்கள் தவிர்க்கப்பட்டன !

Tuesday, March 20th, 2018

யாழ்ப்பாணம் கச்சேரியடியை அண்மித்து இடம் பெறவிருந்த தொடருந்து விபத்து சாரதியின் மதிநுட்பத்தால் தவிர்க்கப்பட்டது.

தொடருந்து வரும் போது வீதிப் போக்குவரத்தை தடுக்கும் வகையில் போடப்படும் இரும்புத் தண்டவாளம் போடப்படவில்லை அந்த இடத்தில் கடவைக்குப் பொறுப்பாக அமர்த்தப்பட்டவர் ஆழ்ந்து உறங்கி விட்டார் என்றும் அவர் அந்த நேரம் அங்கிருக்கவில்லை என்றும் மாறுபட்ட காரணங்கள் பல கூறப்பட்டுகின.

கொழும்பிலிருந்து புறப்பட்ட தபால் தொடருந்து நேற்றுக் காலை 6 மணியளவில் கச்சேரியடி ஏ1 கடவையைக் கடக்கும் போது பெரும்  விபத்து இடம் பெறவிருந்தது அங்கிருந்து வரும் போது வீதியில் வாகனங்கள் செல்வதை அங்கிருந்தவாறே அவதானிக்க முடியும.; வாகனங்கள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டது அதனால் தொடருந்து சாரதி நிலமையைப் புரிந்து கொண்டு வேகத்தை குறைத்து விட்டார் அதனால் தொடருந்து வேகம் குறைந்து சென்று கொண்டிருந்தது  எனி;னும் வாகனங்களில் சென்றவர்கள் அதனைக் கவனிக்கவில்லை தொடருந்து வீதியைக் கடந்து கொண்டிருக்கும் போது வீதியில் பயணித்தவர்கள் பதற்றத்துடன் திடீர் திடீரென தமது வாகனங்களை நிறுத்தினார் என்று சம்பவ இடத்தில் நின்றிருந்தவர்கள் தெரிவித்தனர்

கடவைக் காப்பாளர் அறைக்குள் உறங்கி விட்டார் என்றும் தொடருந்துக் கடவைக் காப்பாளராக இருந்திருக்க வேண்டியவர் நேற்றுக் காலை தாமதமாகவே அங்கு சென்றிருந்தார் என்றும் காரணங்கள் கூறப்படுகின்றன

தொடருந்துச் சாரதியின் மதிநுட்பத்தால் தொடருந்தின் வேகத்தைக் குறைத்துள்ளார் தவறியிருந்தால் தொடருந்துடன் வாகனங்க்ள மோதுண்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கும் என்று அந்த இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர் .கடவைகளில் பொறுப்பாக இருப்பவர்கள் கவனயீனமாக நடந்து கொள்வதால் இத்தகைய இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது .

Related posts: