அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம்!

Monday, May 17th, 2021

இலங்கையில் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இணையத்தின் ஊடாக பொது பயன்பாடுகளை பராமரிக்கும் அனைத்து அரச நிறுவனங்களும் கவனமாக செயற்படுமாறு கணனி தயார் நிலை மையம் கோரியுள்ளது.

மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இது தொடர்பில்  தெரிவிக்கையில் –

அண்மைக்கால உலகளாவிய மற்றும் உள்ளூர் இணையப்பாதுகாப்பு சம்பவங்களின் கீழ் இது ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியன்று இந்த இணையத்தாக்குதல்கள் வழமையாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வலைத்தள செயலிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனித்ததாக அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த காலகட்டத்தில் அரசாங்க வலைத்தளங்கள் ஊடுருவக்கூடிய ஆபத்து குறித்து விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பொறுப்பான அதிகாரிகளையும் கோருவதாக மீகஸ்முல்ல வலியுறுத்தியுள்ளார்.

மே 18 ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்ட நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ சைபர் படை என்ற அமைப்பே கடந்த காலங்களில் இந்த நாளில் இணையத் தாக்குதல்களை நடத்தி வந்ததாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: