அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு!

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் படி, கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், பொதுத்தேர்தல் தொடர்பில், இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட நீதியமைச்சினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நல்லிணக்க அலுவலகங்களை நிறுவி, கிராமங்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|