அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது – ஜனாதிபதி செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிப்பு!

Monday, June 6th, 2022

அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

அமைச்சுகளின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை தன்னிச்சையாக நீக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு நிறுவனத் தலைவர்கள் பதவி நீக்கப்பட வேண்டுமாயின் முன்கூட்டியே ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

அவ்வாறின்றி ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிக்காமலோ, ஜனாதிபதி செயலக இணக்கப்பாடு இன்றியோ எந்தவொரு அரச நிறுவனத்தின் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படக் கூடாது என்றும் காமினி செனரத் குறித்த சுற்று நிருபத்தில் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும் அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இதுவரை இரத்து செய்யப்படவில்லை.

இந்த நிலையில் புதிய அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் அமைச்சர்கள் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இரணைதீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாது - முல்லை மாவட்டச் செய...
நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி – ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் நாடாளுமன...
ஓய்வு பெறுவோரை சேவையில் இணைக்க நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமானது - அரச சேவை அமைச்சின் செயலாளர் அ...