6 விசாரணை அறிக்கைகள்  ஜனாதிபதியடம் கையளிப்பு!

Thursday, December 15th, 2016

பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 171 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் 6 விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் வரையில் 1600 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் 165 முறைப்பாடுகள் பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆணைக்குழுவின் செயலாளர் தொடர்ந்தும் கூறுகையில்,

கிடைக்கப்பெற்ற 1600 முறைப்பாடுகளும் உரிய வகையில் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் 45 முறைப்பாடுகள் ஏனைய விசாரணை துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 357 விசாரணை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 36 முறைப்பாடுகள்  மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மேலும்  பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட 6 முறைப்பாடுகள் தொடர்பான வவிசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது

ரக்னா லங்கா விவகாரம் , நீர்கொழும்பு கலப்பு மற்றும்  பாதுகாப்பு அமைச்சின் காலாவதியான வெடிபொருட்கள் விற்பனை உள்ளிட்ட 6 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6 அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கையளிக்கப்பட உள்ளன.

அத்துடன்  பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பான மீளாய்வு அறிக்கை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதுடன் அவ்வாறானதொரு அறிக்கை அடுத்த வாரத்தில் கையளிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

 adffafs1

Related posts: