5,824 பொலிஸாருக்கு பதவி உயர்வு!

5,824 பேருக்கு பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் பொலிஸ் தலைமையகத்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 41 பேர் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகவும், 878 சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களாகவும் இவ்வருட ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதன்படி 4,545 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், சார்ஜன்களாகவும் 169 சார்ஜன்கள் சப் இன்ஸ்பெக்டர்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் 147 பெண் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகவும் 15 பெண் பொலிஸ் சார்ஜன்கள் சப் இன்ஸ்பெக்டர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இப்பதவியுயர்வுகள் சிரேஷ்ட தரத்திற்கு அமையவே பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் ஆரம்பம் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
|
|