அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் ஆரம்பம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Saturday, April 22nd, 2017

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொள்வதற்கு தற்போது 95 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற அரசியல் கட்சிகளைத் தனித்தனியாக அழைத்து நேர்காணல் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் நேற்று சில கட்சிகளின் நேர்காணல்கள் நடைபெற்றுள்ளது. அத்துடன் இன்றும், மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் அனுமதி தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு, கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது. 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, 95 புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகள் சேவையில்- நாளைமுதல் நடைமுறை என இராஜாங்க அமைச...
அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுற...
மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் - ர...