5 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!
Thursday, August 4th, 2016
பருத்தித்துறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த கைது இடம்பெற்றள்ளதாகவும் 23 வயதான இளைஞர் ஒருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் குறித்த சந்தேக நபரிடமிருந்து 5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை இன்று (04) நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
போதையில் மோட்டார்சைக்கிள் ஓடியவருக்கு இரண்டு மாத சிறை!
இலங்கைக்கு நிதி உதவி வழங்க அமெரிக்கா தீர்மானம்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!
|
|
|


