2477 சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் பணியாளர்கள் காவல்துறையில் இணைப்பு!
Wednesday, January 11th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி உத்தரவிற்கு அமைய 2477 சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் பணியாளர்கள் காவல்துறையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் திணைக்கள பணியாளர்கள் வீடு மற்றும் நீதிமன்றம் ஆகிய இடங்களுக்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதனடிப்படையில் 5000 சிவில் பாதுகாப்புப் திணைக்கள பணியாளர்கள் வில்பத்து, அனுராதபுரம், ஹொறவபதாண, உகனை, கெபித்தி கொல்லேவ, வெலிஓயா, மஹோதய, அம்பாறை, புத்தளம், திருகோணமலை, கோமரங்கடவல, சேருவில, பொலன்னறுவை, மெதிரிகிரிய, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மொனராகலை ஆகிய காவல்துறை நிலையங்களுக்கு இணைத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வீதிகளில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!
யாழ் நகர வீதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்த நடவடிக்கை!
மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை - நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச...
|
|
|


