தொடரும் மழை: நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு – சந்தோசப்படும் யாழ் நகர வர்த்தகர்கள்!

Friday, October 25th, 2019

தீபாவளி திருநாள் நெருங்கியுள்ள நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் யாழ் நகரப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் எதிர்வரும் 27 ஆம் திகதி தீபாவளி கொண்டாடும் நிலையில், யாழ்ப்பாண நகரில் வர்த்தகம் கடந்த ஆண்டை விட சிறப்பாக  இருப்பதாக நகர  வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தொடரும் மழையுடனான காலநிலையால் தாம் அதிக சந்தோசப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாண நகரிலுள்ள புடவை விற்பனை நிலையங்களில் புதிய வடிவங்களில், புத்தாடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில தினங்களாக தீபாவளி வியாபாரம் சிறப்பாக இருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமக்கு வியாபாரம் சிறப்பாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக தொகையை முதலிட்டு, புதிய ஆடைகளை இந்தத் தீபாவளிக்கு கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி, நெல்லியடி, சுன்னாகம் நகரங்களிலும் தீபாவளி வியாபாரம் மெல்ல மெல்லக் களை கட்டத் தொடங்கியுள்ளது.  தொடர்ச்சியாக மழை பெய்வதால் நடைபாதை வியாபாரிகள் கடைகள் இல்லை.  இதனால் தமது வர்த்தகம் சிறப்பாக இருப்பதாக, நிரந்தரக்கட்டங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே வறிய மக்களும் தீபாவழி திருநாளை தமது உழைப்பிற்கேற்ப கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் நடைபாதை கடைகள் மழை காரணமாக இம்முறை யாழ் நரப்பகுதியில் குறைவாக காணப்படுவதால் வறிய மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளமை குறிப்பித்தக்கது.

Related posts: