ஆபத்தான கட்டத்தில் நாடு – பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் – பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர்வலியுறுத்து!

Friday, May 7th, 2021

நாட்டில் தற்போது நாளாந்தம் 1900 என்ற அளவில் கொரோனா தொற்றாள்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி மிக்க வாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர் எம் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுறுகையில் –

இலங்கையை பொறுத்தவரையில் ஆபத்தான காலத்தை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. எனவே சுகாதார அதிகாரிகள் கொரொனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: