2018 ஆம் ஆண்டிடு ஏப்ரல் மாதத்தில் வெசாக் நோன்மதி தினம் !

Monday, July 17th, 2017

அடுத்த வருட வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ளமை குறித்து மஹாநாயக்கர்களிடம் கருத்துக்களை கோரியிருப்பதாக புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நோன்மதி மற்றும் ஏனைய வத வழிபாட்டு தினங்களை பௌத்த சாசன அமைச்சே பிரகடனப்படுத்தும். போயா நோன்மதி தினத்தை பிரகடனப்படுத்தும் போது மஹாசங்கத்தினரின் கருத்து பெற்றுக்கொள்ளப்படும். இதனை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வர்த்தமானியில் வெளியிடும். சந்திர கணக்கின்படி அடுத்த வருடத்தில் வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்திலேயே இடம்பெறுகிறது.

வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறுவது இது முதலாவது சந்தர்ப்பம் அல்லவென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பௌத்த கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 1865ம் ஆண்டில் வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்றிருந்தாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: