2 ஆண்டுகளாக 3150 கிலோ கிராம் எடையுடைய இறால்கள் குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கம்!

Monday, August 29th, 2016

3150 கிலோ கிராம் எடையுடைய இறால்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபன குளிர்சாதனப் பெட்டிகளில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இறால் வகைகளை புதிய வகை இறால்களுடன் கலந்து சந்தையில் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மூடப்பட்டதன் பின்னர் வாடகை அடிப்படையில் இரண்டு கொள்கலன் குளிர்சாதனப் பெட்டிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு இந்த இறால் தொகை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று மீன்பிடிப்பதற்கான இறையாக இறால்களை பயன்படுத்தவெனக் கூறி இந்த இறால் தொகையை இரண்டாண்டுகளுக்கு முன்னதாக குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்தியுள்ளது.மீன்பிடித் திணைக்கள குளிர்சாதனப் பெட்டிகள் மூடப்பட்ட நிலையில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கொள்கலன்களில் இந்த இறால் வகை களஞ்சியப்படுத்தப்பட்டது.

எனினும், இந்த இறால் தொகையை குறித்த நிறுவனம் குளிர்சாதன வாடகையைச் செலுத்தி மீளப் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் அவற்றை விற்பனை செய்ய இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஆறு அதிகாரிகள் இது குறித்து மீன்பிடித் திணைக்களத்தில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது

Related posts: