பெற்றோலுக்கு தட்டுப்பாடு இல்லை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Tuesday, April 26th, 2016
குடாநாடு உட்பட நாட்டின் சில பாகங்களில் கடந்த சில தினங்களாக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பி விடும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முத்துராஜவெலவில் உள்ள எரிபொருள் தாங்கியில் இருந்து பவுசர்களில் எடுத்து வரப்பட்ட பெற்றோல் நேற்று மதியம் தொடக்கம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தலா 6600 லீற்றர் விநியோகிக்கப்பட்டதாகவும் இன்றைய தினம் தேவையான பெற்றோல் விநியோகிக்கப்படும் எனவும் கூடுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்பாதன ஊழியர்கள் புதுவருட விடுமுறைக்கு சென்றதனாலேயே எரிபொருளை முகாமை செய்வதில் சில தினங்கள் கால தாமதம் ஏற்பட்டதாகவும் இதனாலேயே நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் யாழ் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டனர்.
நேற்றைய தினம் யாழில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: