ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Saturday, June 10th, 2017
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கொழும்பு ஆமர் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 272 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை ,யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 5.6 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காங்கேசன்துறை கடற்பரப்பில் பையொன்றில் மிதந்து வந்த நிலையில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டது
மீட்கப்பட்ட போதைப்பொருள் 5.6 கோடி ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது
குறித்த போதைப்பொருள் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் கடற்படையினால் கையளிக்கப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
மற்றுமொரு குப்பை பிரச்சினை!
மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலையும் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் - இறக்குமதியாளர்கள் சங்...
மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் - நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை..!
|
|
|


