வேட்டையில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை.!

Sunday, August 21st, 2016

சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் தென் பிராந்தியத்துக்கான உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சிங்கராஜா வன பகுதியில் உள்ள விலங்குகளை மக்கள் வெகுவாக வேட்டையாடி வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் மரை வேட்டையாடல் அதிகரித்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான  காலப்பகுதிக்குள் சட்ட விரோதமாக  மரை வேட்டையாடலில் ஈடுபட்டு வந்த 08 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு  எதிராக நீதிமன்றத்தின் ஊடக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சிங்கராஜா வன பகுதியில் அதிகரித்து வரும் வேட்டையாடும் நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் இப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேட்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு இணங்க கடந்த வாரம் மாத்திரம் தொடர்ச்சியாக 6 தடவைகள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் விலங்கு வேட்டையாடலில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுமிடத்து இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்விடயத்தில் வன ஜீவராசிகள் திணைக்களம் மிகவும் உறுதியாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: