சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட படகும் இயந்திரமும் அரசுடமையாகியது!

Friday, October 13th, 2017

அல்லைப்பிட்டியில் சட்டவிரோதமாகத் தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டவர்களின் படகு மற்றும் இயந்திரங்களை அரச உடமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான்மன்று உத்தரவிட்டுள்ளது.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்படியில் ஈடுபட்டனர் என்று குற்றஞ் சாட்டி மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

நீதிமன்றில் குற்றச்சாட்டை மீனவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அது பற்றிய விசாரணை இடம்பெற்று வந்தது.  விசாரணையின் போது அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டது. குறித்த மீனவர்களின் படகு மற்றும் இயந்திரத்தையும் அரசுடமையாக்குமாறும், தடை செய்யப்பட்ட வலைகளை அழிக்குமாறும் திணைக்களத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.

Related posts:


இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்க...
பலத்த எதிர்பார்ப்புடன் கூடுகிறது நாடாளுமன்றம் - 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மூன்றில் இரண்டு பெரும்பா...