வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!
Wednesday, July 13th, 2016
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் காலி மாவட்ட காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவிற்கு உட்படாமல் செல்லும் நபர்கள் தொடர்பிலான பொறுப்பினை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் பூர்த்தியாகவில்லை-அரசாங்கம்!
தெளிவான எதிர்காலத்தை நோக்கி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை திறம்படச் செய்பவர்கள் ஆசிரியர்கள் - வாழ்...
சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் - அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தல...
|
|
|


