ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் பூர்த்தியாகவில்லை-அரசாங்கம்!

Friday, September 9th, 2016

ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் வரையும் பணிகள் பூர்த்தியாகவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு எல்லை நிர்ணயப்பணிகள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் ஐந்து மாவட்டங்களின் கிராம சேவகர் பிரிவுகளுக்கான வரைபடங்களை வரையும் பணிகள் மட்டும் எஞ்சியுள்ளன.

வரைபடங்களை வரையும் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் இந்த அறிக்கை நாடாளுமன்றின் துணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும். தேவை ஏற்பட்டால் இந்த சட்டத்தை ஒரே நாளில் நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

அல்லது சில தினங்கள் விவாதம் நடத்தி அதன் பின்னர் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எவ்வாறெனினும் குறித்த பணிகளை ஒக்ரோபர்மாதத்திற்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

lakshman-yapa

Related posts: