அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையையில் திருத்தம் – நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 5th, 2022

அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் குறித்த சம்பள முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது ஆசிரிய ஆலோசகர் சேவை நிறுவப்படாமையால், குறித்த சேவைக்கான சம்பளத்திட்டத்தை உள்ளடக்கி அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு இயலுமான 03/2016 வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளை இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் ( Indian Line of Credit ) கீழ் கொள்வனவு செய்வதற்காகும் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளிடம் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் மஹேந்திரா மற்றும் மஹேந்திரா கம்பனிக்கு வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: