தெளிவான எதிர்காலத்தை நோக்கி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை திறம்படச் செய்பவர்கள் ஆசிரியர்கள் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021

இன்று உலக ஆசிரியர் தினமாகும். பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலக ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.  

அதில் மேலும் குறிப்பிடுகையில் –  இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

யுனெஸ்கோ ஒக்டோபர் 5 ஆம் திகதியை உலக ஆசிரியர் தினமாக 1994ஆம் ஆண்டு அறிவித்தது.

உலக ஆசிரியர் தினத்தை ஒட்டி இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்ரோபர் 6 ஆம் திகதி நாளையதினம் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: