ரவிராஜின் கொலை வழக்கின் விசாரணைகளை 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் முன்னெடுக்க தீர்மானம்!
Tuesday, November 1st, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் முன்னெடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த கொலை விவகாரம் தொடர்பான சாட்சி விசாரணைகளுக்காக 7 பேர் கொண்ட ஜூரி சபையொன்றும் இன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் முன்னாள் கடற்படை வீரர்கள் மூவர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts:
வெளிநாட்டு வேலை வாய்ப்பு எனக் கூறி நிதி மோசடி!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
|
|
|


