வெளிநாட்டு வேலை வாய்ப்பு எனக் கூறி நிதி மோசடி!

Wednesday, November 16th, 2016

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரால் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இவருக்கு எதிராக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் 275க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபர் இரண்டு வருடங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாதிருந்த நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விஷேட விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

thumb_large_download

Related posts: