நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் – தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Saturday, March 26th, 2022

“ஐக்கிய இலங்கையில், அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது எமது எதிர்பார்ப்பாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்போது என்னிடம் தெரிவித்தார் என கூட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச “நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தான் இன்று நேரில் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தான் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதானையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஶ்ரீ ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குறிப்பிட்ட ஜனாதிபதி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல், குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட – பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதனை எடுத்துக் கூறியதாக தெரிழவித்துள்ளார்.

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என்பதனை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என்பதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இன்று தெரிவித்திருந்தார் என்பதனையும் நிளைவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் “நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும்” என்பதை இதன்போது  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, கிழக்குலகின் சுவிட்சர்லாந்தாக மாறுவதைக் காண தாம் விரும்புவதாகவும் தெரிவித்த சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீண்டகாலமாகக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள், நீண்டகாலமாகப் பயிர்ச் செய்யப்பட்ட காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல், புதிய அரசமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல், வடக்கு -கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இன்று அவதானம் செலுத்தப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: