யு.எஸ்.எஸ்.சொமசெற் அமெரிக்க கடற்படைக்கப்பல் திருமலையில்!

Thursday, November 24th, 2016
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ்.சொமசெற் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

நல்லெண்ண நோக்கோத்தோடு வருகை தந்துள்ள இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றனர். எதிர்வரும் 26ஆம் திகதிவரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள இந்த கப்பல் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றது.

navy-2

Related posts: