யுவதியை ஏமாற்றிய இளைஞன் மீது தாக்குதல் : புத்தூரில் சம்பவம்!

காதலித்துத் திருமணம் செய்வதாகத் தெரிவித்து ஏமாற்றிய இளைஞனை ஏமாற்றப்பட்ட யுவதியின் உறவினர்கள் இணைந்து சரமாரியாகத் தாக்கியதுடன், இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிளையும் அடித்துடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) இரவு புத்தூர் நவக்கிரிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
21 வயதான இளைஞனொருவன் அதே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் வயது காரணமாகக் காதல் செய்த யுவதியைக் கைப்பிடிக்க மறுத்துள்ளான். இதனையடுத்தே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ். அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
ஆவா குழுவின் பின்னணியில் யார்? - பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்...
யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் மோதல்: பெண்ணொருவர் காயம்
பொதுப் போக்குவரத்தின் போது சுகாதார விதிமறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊட...
|
|