இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு

Thursday, May 18th, 2017

பிரபஞ்ச அழகி போட்டிக்கான அழகிகளின் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்க அழகியாக வேதியியல் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் காரா மெக்கல்லோ தெரிவாகியுள்ளார்.

அமெரிக்க அழகிப் போட்டி நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. வெவ்வேறு மாநிலங்களின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான காரா மெக்கல்லோ, நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்த சாவ்வி வெர்ஜ், மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த மெரிடித் கோல்ட் ஆவர்.

இறுதிப்போட்டியாளர்களிடம் நடுவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு காரா மெக்கல்லோ சாதூர்யமாக பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மிஸ் அமெரிக்காவாக தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்க அழகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் காரா மெக்கல்லோ, இந்த ஆண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்பார்.அவர் ஏற்கனவே மிஸ் வாஷிங்டன் பட்டம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: