போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடர போவதில்லை – கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள் மல்லாவியில் கைது!

Thursday, August 31st, 2023

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடர போவதில்லை என தெரிவித்து கையூட்டல் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரையும், கான்ஸ்டபிள் ஒருவரையும் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

ஜே.சி.பி ரக இயந்திர வாகனத்திற்கு வருமானவரி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், இல்லை என்பதை அறிந்த போதிலும், அதற்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், குறித்த வாகன சாரதியிடமிருந்து, குறித்த பொலிஸ் அதிகாரிகள் கையூட்டல் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் வாகன சாரதியிடமிருந்து, 25 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக கோரிய நிலையில், அவரிடமிருந்து முதற்கட்டமாக 12 ஆயிரத்து 500 ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் இலங்கைக்கு வெற்றி - பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்...
இலங்கைக்கு உண்மையான நண்பனாக சீனா இருந்தது - பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவிப்பு!
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்றுமுதல் மேற்கொள்ளப்படும் - பல்கலைக்கழக மானியங்கள்...