இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணங்களின் அதிகரிப்பு வேகமானது 1.07 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியம் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021

இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியத்தின் தரவுகளின் படி, நாட்டில் கொவிட் மரணங்கள் சதவீதம் 1.07 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் இதுவரையில் மரணித்துள்ளனர். இது சதவீத அடிப்படையில் 2.17 சதவீதமாக பதிவாகியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, சர்வதேச ரீதியில் பிரேஸில் நாட்டிலேயே கொரோனா மரண சதவீதம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்டில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளதுடன் மரணங்களின் சதவீதம் 2.8 ஆக பதிவாகியுள்ளது

3 இலட்சத்து 86 ஆயிரத்து 740 மரணங்கள் இடம்பெற்றுள்ள இந்தியாவில், மரணங்களின் சதவீதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது.

இதேநேரம் அமெரிக்காவில் 6 இலட்சத்து 17 ஆயிரத்து 9 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், அங்கு மரணங்களின் சதவீதம் 1.79 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: