அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Tuesday, May 21st, 2019

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு மற்றும் நீடித்த திட்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பணவியல் கொள்கை மற்றும் சந்தை ஸ்திரத்தன்மையினை படிப்படியாக பேண முடியும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மனுய்லா கொரிற்றி வாஷிங்டனில் இருந்து இணைய காணொளி தொடர்பு மூலம் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை 2019 பாதீடு மூலம் முன்னேற்றகரமான நிதி ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதன் காரணமாக சிறப்பான பலன்களை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்கள்  காரணமாக பொருளாதார பின்னடைவு எந்த அளவிற்கு இலங்கையை தாக்கும் என்பது குறித்து உடனடியான முடிவிற்கு வர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: