தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று!

Friday, June 18th, 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

குறித்த மிருகக் காட்சிச்சாலையின் சிங்கத்தீவில் வதியும் தோர் எனப்படும் சிங்கத்துக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த சிங்கம் கடந்த 2012 ஆம் ஆண்டு தென்கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சிச் சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சிங்கம் பல நாட்களாக இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து பேராதெனிய கால்நடை பீடத்துக்கு சிங்கத்தின் சளி அனுப்பி பரிசோதிக்கப்பட்டதில் தொற்று உறுதியாகி யுள்ளது.

இதேவேளை சிங்கத்தின் கூண்டுக்குப் பொறுப்பான இரு காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கூறுகையில் – மிருகக்காட்சிசாலையில்  சிங்கம் ஒன்று நோய்வாய்ப்பட்டமை உண்மைதான். ஆனால் பி. சி. ஆர். சோதனை முடிவுகளில் பிழைகள் ஏற்படக்கூடும் என்பதால், இந்தியாவுடன் பேசவும், முறையான விசாரணையை நடத்தவும் மிருகக்காட்சிசாலையின் இயக்குநர்கள் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


புதிய கல்விச்சீர்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வ...
பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர் - அமைச்சர் ஜீவன் தொண்...
தனியாருடன் இணைந்த சேவையை முன்னெடுப்பது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் –ஆளுநரின் அறிவிப்புக்கு இ.போ.ச எட...