வாக்குறுதிகளை நிறைவேற்றினால் வரிச் சலுகை!

Thursday, July 21st, 2016

இலங்கை அளித்த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்பட்டாலேயே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுஇந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதிநிதிகள்பிரசல்ஸிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதில், இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைபெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தபரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமெனதெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் குன்னர் வெய்கென்ட் தலைமையிலான பிரதிநிதிகள்,இலங்கைப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: