இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு – உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வு!
Tuesday, November 2nd, 2021
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாவகச்சேரி வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் இட நெருக்கடி!
வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு மாதாந்தம் தொகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வு ...
போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையே தீர்வு - அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்து!
|
|
|
காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் பி.சி.ஆர் சோதனை - வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை...
பாகிஸ்தானில் கடும் மழை - பாரிய அனர்த்த நிலைமை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிற்கு, ஆறுதல...


