யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் மோதல்: பெண்ணொருவர் காயம் 

Saturday, June 24th, 2017
யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணை செய்வதற்குப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதில் பெண்ணொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை(23) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related posts: