யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களைப்  பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளை அறிவுறுத்திய அரசாங்க அதிபர்

Sunday, January 1st, 2017

யாழ். மாவட்டத்தில் டெங்குத் தொற்று அதிகமாக இருப்பதனால்  அதிலிருந்து  மாணவர்களைப்   பாதுகாக்கும் செயற்பாடுகளை அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.  டெங்கு நோய்த்  தொற்றிலிருந்து  மாணவர்களைப்  பாதுகாக்கும் வகையில் டெங்கு பரவுமிடங்களை  அடையாளப்படுத்தி அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்குக்  கட்டுப்பாடு தொடர்பாக அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று கடந்த (30) யாழ் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,  யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் ஒருமாத கால விடுமுறையின் பின்னர் எதிர்வரும்-02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அந்த வகையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் பாடசாலைச் சூழல்களை விரைவில் சுத்தப்படுத்த அதிகாரிகள், பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலதிக உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அந்தந்தப்  பகுதிச் சுகாதார வைத்திய அதிகாரியைச் சந்தித்து உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

vethanayakan-720x480

Related posts: