சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின் சுற்றுநிருபப்படி : சமுர்த்தி பயனாளிகளுக்கு குடும்பங்களில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு உதவித்தொகை !

Friday, November 4th, 2016

சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பு அமைச்சினால் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தைக்காக வழங்கப்பட்டு வரும் 7ஆயிரத்து 500ரூபா பணம் 2ஆவது 3ஆவது அகிய குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன் மேலதிகமான இரண்டைக்குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் மாதம் ஒன்றிற்கு தலா 5ஆயிரம் ரூபா வீதம் ஓரு வருடத்திற்கு 60ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஒரே தடவையில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பிரசவிக்கும் போது மாதம் ஒன்றிற்கு 10ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநயக்க சுற்றுசிருபங்கள் ஊடாக சமுர்த்தி நிர்வாக அலுவலர்களுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மாருக்கு இதுவரை காலமும் ஒரு குழந்தை சுமார் 7ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. கடந்த உலக சிறுவர்தினம் கொண்டாடப்பட்ட ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் சமுர்த்திப் பயனாளிகள் குடும்பங்கள், பயனாளிகள் அல்லாத குடும்பங்கள் என்பவற்றில் பிறக்கும் குழந்தைகள் அனைத்திற்கும் மேற்கூறப்பட்ட கொடுப்பனவுத் தொகை வாழ்வின் எழுச்சிப் பாதுகாப்பு நிலையத்தினால் வழங்கப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் சுற்றுசிருபங்கள் ஊடாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் மேலதிக தகவல் பெற விரும்புவோர் 011 286 4398 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 011 286 4398 என்ற தொலைநகல் ஊடாகவோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

samurdhi

Related posts:

கிரிக்கெட் விளையாடப்படுவது நிறுத்தப்படும் வரை இலங்கை - இந்தியா இடையில் நெருக்கடிகள் இல்லை - பிரதமர் ...
கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!
திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு - பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!