யாழ். வருகைதரவிருக்கும் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின் குழுவினர் ஆராய்வு

எதிர்வரும் -18 ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமான விஐயமொன்றை மேற்கொண்டு யாழ் வருகை தரவிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை(11-06-2016) யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் யாழ் . மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தலைமையில் நடைபெற்றது..
ஐனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.வி.விக்கிரமசிங்க தலைமையிலான ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின் குழுவினர் கலந்து கொண்டு பொலிஸ், இராணுவ அதிகாரிகளுடன் யாழ். வரவிருக்கும் ஜனாதிபதி பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்ந்தனர்.
அத்துடன் யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள நவீன மயமாக்கப்பட்ட யாழ். தலைமை பொலிஸ் நிலையக் கட்டடத் தொகுதியினையும் குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.
Related posts:
|
|