இரசாயன உர நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கு அஞ்சப் போவதில்லை – விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Sunday, October 24th, 2021

இரசாயன நிறுவனங்களின் தூண்டுதல்களிற்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும். அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை மீற மாட்டேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்றும் விவசாயிகளிடம் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

இதன்போது பசளை தயாரிக்கும் நிலையத்துக்குச் சென்று, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தை பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அதன்பின்னர், பயிர்ச்செய்கை நிலத்துக்குச் சென்று, அங்கு பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் தொடர்பாக அவதானித்த ஜனாதிபதி உரத்தைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும் முறையையும் பார்வையிட்டுள்ளாதர்.

மண் புழுக்களைப் பயன்படுத்தி கொம்போஸ்ட் உரம் தயாரிக்கப்படும் இந்த நிலையத்தின் மூலம், மாதாந்தம் 12 தொன் உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

13 ஏக்கர் கொண்ட தென்னை பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பில், பப்பாளி, வாழை, கொடித்தோடை போன்ற பழங்களும் கோவா, பீட்ரூட், பட்டாணி போன்ற மரக்கறிகளுடன் மஞ்சள் மற்றும் முன்மாதிரி நெல் பயிர்ச்செய்கையும் சேதனப் பசளையைப் பயன்படுத்திப் பயிரிடப்பட்டுள்ளன.

இதன்போது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி அதற்காக, முன்னைய அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கும் தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்று யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், 30 வருட யுத்தத்தை நிறைவு செய்ததுபோல எந்தவிதத் தடைகள் ஏற்பட்டாலும், பசுமை விவசாயத்தை வெற்றிகொள்வேன் என்றும் இதன்போது ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்..

அத்துடன் எமக்குத் தேவை வாக்குகள் அல்ல; பொதுமக்களுக்குச் சரியானதைச் செய்வதாகும் என்பதனையும், சரியானதைச் செய்வதற்காகப் பயப்படாது தீர்மானங்களை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை மாத்திரம் கண்டறிவதற்கு தான் தயாராக இருப்பதனையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் நான் அஞ்சப் போவதில்லை என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்,

இதேநேரம் மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கே என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதே எனது விஜயத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: