யாழ்.மாநகரப் பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!

Friday, January 13th, 2017

யாழ்.மாநகர பகுதியில் டெங்கின் தாக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 25பேர் வரையிலானோர் இந்தத் தாக்கத்திற்கு இலக்காகி உள்ளனர். வண்ணார் பண்ணை பிரதேசத்திலேயே இத்தாக்கம் கூடுதலாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனியர் லென், இந்துக் கல்லூரி வீதி, அரசடி வீதி, ஆகிய இடங்களில் இத்தாக்கம் கூடுதலாக காணப்பட்டது. இப்பகுதியில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு தொடர்பாக விழிப்புணர்வு செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேசமயம் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2016ஆம் ஆண்டில் 276 பேர் மட்டுமே டெங்கினால் பாதிக்கப்பட்டனர். என்றாலும் 2015 ஆம் ஆண்டில் 532பேர் டெங்கு தாக்கத்திற்கு இலக்கானார்கள். 2016ஆம் ஆண்டில் இதன் தாக்கம் இரட்டிப்பாக அதிகரித்து காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

dengue-page-upload-1

Related posts: