யாழ். பல்கலை மாணவர் படுகொலை:உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழு யாழ். வருகை!
Tuesday, October 25th, 2016
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் கடந்த புதன்கிழமை(20) இரவு கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்றுச் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.
குறித்த குழுவினர் நேற்றுப் பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர். மாணவர்களின் படுகொலை தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக உண்மையைக் கண்டறியும் குழுவின் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
உரமானிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதிக்கு!
கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது தாக்குதல்
சமுர்த்தி வீட்டுத்திட்ட விசாரணைகள் முழுமையாக இடம்பெறவில்லை - வவுனியா அரச அதிபரிடம் முறைப்பாடு!
|
|
|


