சமுர்த்தி வீட்டுத்திட்ட விசாரணைகள் முழுமையாக இடம்பெறவில்லை – வவுனியா அரச அதிபரிடம் முறைப்பாடு!

Thursday, June 15th, 2017

வவுனியாவில் சமுர்த்தி வீட்டுத்திட்டம் தொடர்பான இடம்பற்ற விசாரணைகள் முழுமையான இடம்பெறவில்லை எனவும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவல்லை எனவும் தெரிவிப்பதற்காக புளிங்குளம் தெற்கு பிராம சேவையாளர் பிரிவு மக்கள் வவுனியா மாவட்ட அரச அதிபரை சந்திப்பதற்காகச் சென்றார்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் யுத்தம் நிறைவுற்ற பின்னர் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட பொத மக்களுக்கான வீட்டுத் திட்டத்தில் குறிப்பாக சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற மறைகேடு தொடர்பாக பல முறைப்பாடுகளை அப்பகுதி மக்கள்  நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர். வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல் தொடர்பாக அரச மட்டத்தில் இடம்பெற்ற விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை. மாறாக உத்தியோகத்தர்கள் வவுனியா  மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான விசாரணைகள் முடிவிற்கு வரவில்லை. இன்று வரையில் எமது வீட்டுத் திட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை. எமக்கு நியாயம் கிடைக்கவில்லை. மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். எமது பகுதியில் இரண்டு அங்கத்தவர்களுக்கு வீடுகள் வழங்கபபட்டுள்ளன. ஆனால் 5 அங்கத்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. வவுனியாவில் வசிப்பவர்களுக்கு புளியங்குளத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது புளிங்குளத்தில் யுத்ததின் பின்னர்  குடியேறிய எமக்கு வீடுகள் வழங்கப்படவில்லை.சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் ஒரு இலட்சம் ரூபா எமது வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது அனால் 10 அயிரம் ரூபாவிற்கு வீடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றும் பலருக்கு சமுர்த்தி வீட்டுத்திட்டத்திற்கான கல், மண், பறிக்கப்பட்டு புல் வளர்ந்து அப்பகுதி காட்சியளிக்கின்றது. இன்று வரையும் வீடு கட்டி முடிக்கப்படவில்லை.

Related posts: