புதிய ஆண்டுமுதல் கல்வி முறையில் புதிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அறிவிப்பு!

Wednesday, December 13th, 2023

எதிர்வரும் ஆண்டுமுதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும்,

மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும்,

2022ல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மதிப்பீடு செய்யும் நிகழ்வில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களை இங்கு வழங்கிய அமைச்சர், எதிர்காலத்தில் பரீட்சையில் 100 வீத சித்திகளைப் பெற்று மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 30 வீத புள்ளிகளைப் பெறுவதோடு 4ம் மற்றும் 5ம் தரங்களில் வகுப்பறையில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 வீதமான மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டும் எனவும், இதற்காக தொடர்ச்சியான வருகைப் பதிவை மாணவர்கள் பெற வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள் என்று சில பெற்றோர்கள் விமர்சிக்கலாம், ஆனால் அவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடமில்லை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஆசிரியர்கள் மீது தெளிவான நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகிறார்கள் என்பதை பாடசாலை வாரியங்கள் கண்காணிக்கின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறந்த கல்வியைக் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்ட பின்லாந்தில் கூட 9 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகளிலும் வகுப்பறை அளவிலான மதிப்பீடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: