கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது தாக்குதல்
Saturday, May 14th, 2016
அளவெட்டி கூட்டுறவுச் சங்கக் கடைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (12-05-2016) இரவு கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பிரசன்னா (வயது -21) என்ற இளைஞனே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.2
இச்சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் எனவும் , தாக்கியவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த மாதம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை!
எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...
|
|
|


